அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி விசேட கலந்துரையாடல் – தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பு

எதிர்க்கட்சிகள் இன்று (20) பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டன.

பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தே இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பிரதான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக அரசு முன்வைத்த பல்வேறு கருத்துக்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் தொடர்பான சபாநாயகரின் அறிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், சபாநாயகர் நாளை (21) இது குறித்து தனது நிலைப்பாட்டை முன்வைப்பார் என்று எதிர்க்கட்சி கட்சிகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்ற மரபுப்படி முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் எதிர்க்கட்சி கட்சிகள் கருதுகின்றன.

இந்த கலந்துரையாடலில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், எஸ். ஸ்ரீதரன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதற்கிடையில், பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை நண்பகல் 12.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ளது.

Related posts

இலங்கை – இந்தியா கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

editor

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்