உள்நாடு

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்று (01) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாளையும் 7 1/2 மணித்தியால மின்வெட்டு

இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு பலி

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor