உள்நாடு

எட்டு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி காலி யக்கலமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நாளை காலை 10.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.

இதன்படி, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சீரற்ற காலநிலையினால் மண்சரிவு அபாயம் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் – ஐவர் கொண்ட குழு நியமனம்