வணிகம்

எட்கா உடன்படிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய பொருளாதார மற்றும் தொழிநுட்ப உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடலே இடம்பெறுவதாகவும் இறுதித் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த கலந்துரையடல்களில் எட்கா உடன்படிக்கை தொடர்பான இரு நாடுகளின் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

 இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி

இலங்கைக்கு, அமெரிக்கா மீண்டும் ஜிஎஸ்பி சலுகை