உள்நாடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் பற்றிய விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்

(UTV | கொழும்பு) –   கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும், அது தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் சட்டமா அதிபர் இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

விசாரணைகளை முடித்து உண்மைகளை முன்வைப்பதற்கான திகதியை வழங்குமாறு அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த, இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி கூட்டி, அன்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு அரசாங்க சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தில் எரிந்த கப்பலின் ரஷ்ய தேசிய கப்டன் மற்றும் கப்பலின் உள்ளூர் பிரதிநிதி நிறுவனத்தின் 04 பணிப்பாளர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts

சிறிய கார் கனவும் கனவாகியே போய்விட்டது – IMF என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் அரசாங்கமே இது – சஜித் பிரேமதாச

editor

இன்று இரவு 9 மணிக்கு ஜனாதிபதியின் விஷேட உரை

மீண்டும் முட்டை பிரச்சினை