உள்நாடு

எகிறும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 82 ஒமிக்ரோன் நோய்த் தொற்றாளர்களும் 6 டெல்டா நோய்த் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

88 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய SARS-CoV-2 வைரஸ் திரிபு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாத்தின் நான்காவது வாரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இந்த நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நோய்த்தொற்றாளர்கள் ஒமிக்ரோன் வைரஸின் BA.1 மற்றும் BA.2 துணை வகைகளின் பிறழ்வில் இருந்து பதிவாகியுள்ளனர்.

Related posts

வவுனியாவில் 28 வயது குடும்பஸ்தர் வெட்டிக் கொலை – மைத்துனர் கைது

editor

WhatsApp இற்கு புதிய வசதிகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது