உள்நாடு

ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

‘திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார்.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர்,

இரண்டு திகதிகளின் கீழ் ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதற்கமைய, கடுமையாக அனர்த்தத்திற்கு உள்ளான பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை (16) ஆம் திகதியும், பாதிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

“ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்திலுள்ள 291 பாடசாலைகளில், பிபிலை வலயத்திலுள்ள தெஹிகலவத்தை பாடசாலை தவிர்ந்த ஏனைய 290 பாடசாலைகளையும் நாளை (16) திறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று, பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை வலயத்தில் திக்யாய வித்தியாலயம், களுக்கல வித்தியாலயம் மற்றும் பின்னகொல்ல வித்தியாலயம் தவிர்ந்த ஏனைய 78 பாடசாலைகளை நாளை திறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிலவும் அனர்த்த நிலைமையுடன் பதுளை மாவட்டத்தின் ஏனைய வலயங்களான பதுளை வலயம், பண்டாரவளை வலயம், வெலிமடை வலயம், பசறை வலயம் ஆகிய வலயங்களைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்பட மாட்டாது என்பதுடன், 29 ஆம் திகதி அந்த வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Related posts

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே கலந்துரையாடல்

மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது? அநுரகுமார திஸாநாயக்க