ஊவா மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இன்று (16) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறக்க முடியாமைக்கு முக்கிய காரணம் போக்குவரத்து அசௌகரியங்கள் அல்லது நிவாரண முகாம்கள் இயங்குவதே ஆகும் என்றும் அவர் கூறினார்.
