வகைப்படுத்தப்படாத

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய திட்டம்

(UTV|COLOMBO)-பெப்ரவரி 10ஆம் திகதியின் பின்னர், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சி பேதமின்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

எனவே, விருப்பமுள்ளவர்கள் தம்முடன் இந்த நடவடிக்கையில் இணைய முடியும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான புதிய நடவடிக்கையின்றி, இந்த நாட்டை சரிசெய்ய முடியாது.

குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கி, புதிய சமுதாயத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

කළු කැළණි ගංගා වල ජල මට්ටම ඉහළට

3,493 drunk drivers arrested within 12 days