(UTV|COLOMBO) நேற்றைய தினம் நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போருதொட பிரதேசத்தில் இருதரப்பினருக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் அங்கு அமைதியற்றத் தன்மை ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை ஊரடங்கு சட்டம், நீர்கொழும்பு காவற்துறை பிரிவுக்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 7.00 மணியுடன் தளத்தப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டிருந்தார்
