உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் மொத்தமாக 302 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 53 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சாப்பிட்ட உணவில் கரப்பான் பூச்சி – ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor