உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 56,326 பேர் கைது

(UTV | கொவிட் 19) – ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 56,326 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 274 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15490 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தம்

‘யாரும் பின்வாங்க வேண்டாம்’ – விண்ணப்பத் திகதி இன்றுடன் நிறைவுக்கு

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ரிஷாட் வேண்டுகோள்