வகைப்படுத்தப்படாத

ஊடக உரிமைகள் மற்றும் நியமங்கள் தொடர்பான சட்டமூலத்தை வகுக்க அமைச்சரவைக்குழு

(UDHAYAM, COLOMBO) – வெகுஜன ஊடக உரிமைகள் மற்றும் தராதரங்கள் தொடர்பான சட்டமூலத்தை உருவாக்குவதற்காக அமைச்சர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவிற்கு ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் கலாநிதி. சரத் அமுனுகம, டொக்கடர்.  ராஜித்த சேனாரட்ன கயந்த கருணாதிலக்க ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர். பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஒருங்கிணைப்பாளராக செயற்படுவார்.

இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக  நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவை துணை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் அமைச்சரவையிடம் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும்.

சிவில் சமூக அரசசார்பற்ற மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை ஊடக அமைச்சின் வாயிலான முன்னெடுத்தச் செல்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க யோசனை ஒன்றை முன்மொழிந்தார்.

இந்த செய்தியானர் மகாநாட்டில் கலந்துகொண்ட  பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான , இதுதொடர்பாக தெரிவிக்கையில்

சமகால அரசாங்கம் ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்கவில்லையென குறிப்பிட்டார்.

சமகால அரசாங்கமே ஊடக ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஊடக சுதந்திரத்தை உறுதி செசெய்ததென அவர் கூறினார்.

அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். ஊழல் ஒழிப்பு செயலகத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பணிகள் நிறைவேறவில்லை என்று  பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான  தெரிவித்தார்.

Related posts

உலகையே உலுக்கியுள்ள கொடூர சம்பவம் (காணொளி)

Eight trains cancelled due to maintenance work

Army Intelligence Officer arrested over attack on Editor