அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மீண்டும் கூடவுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் மீண்டும் கூடவுள்ளது.

அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடுகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தேர்தல்கள் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறையாகும்.

குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, இத்தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு இதுவரை பணம் ஒதுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

“அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவ ஆரம்பித்துவிட்டனர்”

ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை

CID இனால் கைது செய்யப்பட்ட அசேல சம்பத் பிணையில் விடுவிப்பு