அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.

வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்த நிலையில், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]

இன்றைய மின்வெட்டு அறிவிப்பு

SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் எதிர்க்கட்சி ஆசனத்தில்