அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்பாளர் கைது

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய முறைபாடுகளுக்கு அமைய மற்றுமொரு வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (05) காலை 6 மணி முதல் இன்று (06) காலை 6 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில், குறித்த வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் 5 ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில், மொத்தமாக 55 வேட்பாளர்களும், 208 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 47 ஆகும்.

மேலும், தேர்தலுடன் தொடர்புடைய குற்றவியல் முறைப்பாடுகள் 128 பதிவாகியுள்ளன, மேலும் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 476 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது