அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 6 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அங்கீகரிக்கப்பட்ட 6 அரசியல் கட்சிகள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

அத்துடன், 19 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த 03ஆம் திகதி முதல் ஆரம்பமாகின.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு தபால் மூல வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திகதி எக் காரணத்தைக் கொண்டும் நீடிக்கப்படமாட்டாதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

Astra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க தீர்மானம்!