களுத்துறை பகுதியில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேட்பாளர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுகிறது.