உள்நாடுபிராந்தியம்

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு மூதூரில் நடமாடும் சேவை

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆதன வரி அறவிடல் தொடர்பான நடமாடும் சேவை மூதூர் பிரதேசத்திலுள்ள மூன்று இடங்களில் இன்று (15) இடம்பெற்றது.

பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில் தலைமையில் இவ் நடமாடும் சேவை இடம்பெற்றது.

வளமான நாடும் -அழகான வாழ்க்கையும் எனும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற இவ் நடமாடும் சேவையில் ஆதன வரி தொடர்பான அறிவித்தல் ஒலி பெருக்கியில் வழங்கப்பட்டதோடு பொதுமக்களிடமிருந்து ஆதன வரியும் அறவீடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் நடமாடும் சேவையில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-மூதூர் நிருபர்

Related posts

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரியர் பதவி

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

editor

இந்த அரசாங்கமும் இளைய தலைமுறையினரின் கனவுகளை குழிதோண்டி புதைத்து வருகிறது – சஜித் பிரேமதாச

editor