உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமரசேன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் மகாண பொலிஸ் விசேட பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதுடைய ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரவைகள் 18, போர 12 ரக ரவைகள் மூன்றும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் ஹிக்கடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் தம்பதி கைது

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு ரூ.5000 நிதி

பிரித்தானியாவின் தடை குறித்து ஆராய அமைச்சர்கள் குழு

editor