வகைப்படுத்தப்படாத

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை முடக்கும் முயற்சியில் அரசாங்கம் – விமல் குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கையில் நிறுவும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை முடக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட உரையாற்றும்போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்தார்.

இலங்கையில் பாரிய அளவில் மோசடிகள் இடம்பெற்றுவருகின்றது. மோசடிக்காரர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

இவை எதனையும் கண்டுகொள்ளாமல் அரசாங்கம் சீரற்ற முறையில் செயற்பட்டுவருவதாக விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், தனியார் பேருந்து போக்குவரத்து துறை வீழ்ச்சியடைவதற்கான சந்தர்ப்பம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

லிந்துலையில் இரண்டு கடைகள் தீயினால் எரிந்து நாசம்

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழையினால் 44 பேர் பலி

ராஜகிரிய மேம்பாலத்தின் பணிகள் விரைவில் பூர்த்தி