உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

பொலன்னறுவையில் அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஜுவத்த பகுதியில் 3 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (05) காலை அரலகங்வில பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரலகங்வில பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அரலகங்வில ருஹுனுகம பகுதியை சேர்ந்த 31, 34 மற்றும் 39 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

MV Xpress pearl: சூழல் பாதிப்பு தொடர்பில் மதிப்பிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்

நேற்றைய தினம் மாத்திரம் 25 பேர் கைது

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது