வணிகம்

உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மொனறாகலை விவசாய நாற்று பயிர்ச்செய்கை மத்திய நிலையத்தில் விருத்தி செய்யப்பட்ட உயர்தரமான இராசவள்ளிக்கிழங்கு வகைகள் காலி மத்திய விவசாய வலயத்தில் பயிரிடப்படும்.

தெரிவு செய்யப்பட்ட 150 விவசாயக் குடும்பங்களுக்கு இவ்வாறான நாற்று வகைகள் வழங்கப்பட்டதாக லபுதூவ பிரதி விவசாயக் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கிராமிய விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் மற்றுமொரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts

WhatsApp செயலி பாவனையாளர்கள் கவனத்திற்கு

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்