உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்போபுர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (02) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய யூனிட் 19, அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

ஹொரணவில் அதி பாதுகாப்பு சிறைச்சாலை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட SSP சதீஸ் கமகேவின் விளக்கமறியல் நீடிப்பு

editor