உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹகெலே பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கினியாகல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (04) பிற்பகல் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதுடைய பரகஹகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி

editor

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மங்கள கடிதம்

அநுர அலை இன்னும் குறையவில்லை – அதனை குறைத்து மதிப்பிட முடியாது – கொழும்பில் போட்டியிடுவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்

editor