உள்நாடு

“உள்கட்சி அரசியலை நிர்வகிப்பதே ஆளும் கட்சியின் முக்கிய கவனம்”

(UTV | கொழும்பு) – “தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக உள்கட்சி அரசியலை நிர்வகிப்பதே ஆளும் கட்சியின் முக்கிய கவனம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியின்படி அமைச்சரவையின் விஞ்ஞான ரீதியான நிர்வாகத்தினால் எரிபொருள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை இன்னும் மோசமாகியுள்ளது” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்; இதற்கு முன்னர் கைத்தொழில் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராகவும் பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து மார்ச் 4 ஆம் திகதி நீக்கப்பட்டனர்.

Related posts

‘பாதுகாப்பான நாடு – சுபீட்சமிக்க நாடு’ என்ற தொனிப்பொருளில் 72 ஆவது தேசிய தின வைபவம்

தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகள் 26,000 பேருக்கான ஆசிரியர் நியமனம் தொடர்பான விசேட அறிவிப்பு

சபாநாயகர் தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம்