உள்நாடு

“உலக விவசாய அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுங்கள்.”

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து நாடுகளினதும் விவசாய அமைச்சர்களின் கூட்டத்தை கூட்டி அடுத்த இரண்டு வருடங்களுக்கான உணவுத் தேவைகளை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நேற்று (07) கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நிலையான கடன் நிவாரணத் திட்டத்தை அவசரமாகத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையான கடன் நிவாரணத் திட்டம் பெப்ரவரி 2023க்குள் தயாரிக்கப்பட்டு 2023 முதல் காலாண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் உலக நாடுகளின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய முடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

Related posts

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

editor

ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக அவதூறு – சிஐடியில் முறைப்பாடு!

editor

பாத்திமா மரணம் : தாயும் பூசகர் பெண்ணும் விளக்கமறியலில்