வகைப்படுத்தப்படாத

உலக புகழ் சுழல் பந்து வீச்சாளர் முரளிதரனின் தந்தை முத்தையா அவர்களின் பவளவிழா

(UDHAYAM, COLOMBO) – உலக புகழ் பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முரளிதரனின் தந்தையாரும்  லக்கிலேன் நிறுவனத்தின் உரிமையாளரும்¸ பல சமூக சேவையாளர் விருதுகளுக்கு சொந்தகாரருமான  எஸ்.முத்தையா அவர்களின்  75 வது பிறந்த தினம் (பவளவிழா) இன்று (8) தெல்தெனிய முருகாமலை ஸ்ரீ முருகன் தேவஸ்த்தானம் ஸ்ரீ முத்தையா லக்ஷ்மி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அதிதிகாக பெருந்தெருக்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பனர்களான வேலுகுமார்¸ லக்கி ஜயவர்தண¸ கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமண்¸ கண்டி வர்த்தகர்கள்¸ மாகாண சபை உறுப்பினர்கள்¸ முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள்¸ குடும்பத்தரார்¸ நலன் விரும்பிகள்¸ சமூக சேவையாளர்கள்¸ புத்தி ஜீவிகள்¸ எழுத்தாளர்கள்¸ ஊடகவியலாளரகள்¸ உட்பட பெருந்திரளானோர் கலந்துக் கொண்டாரகள்.

நிகழ்வில் பவள விழா நாயகன் மலர்மாலை அணிவித்து அழைத்து வர பட்டதுடன் முருகாமலை ஸ்ரீ முருகன் தேவஸ்த்தானத்தில் விஷேட பூஜைகள் நடைபெற்றது. பவள விழா நாயகனின் ஞாபகாரத்தமாக   ஸ்ரீ முத்தையா லக்ஷ்மி கல்யாண மண்டபம் அதிதிகளால் திறந்து வைக்கபட்டது. தொடர்ந்து தம்பதிகளுக்கு பொண்னாடை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் பரிசில்கள் வழங்கியும்¸ வாழ்த்துகள் கூறப்பட்டது. அதிதிகளின் உரைகளுடன் கலாச்சரா நிகழ்வுகளும் நடைபெற்றன.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

‘Stray Syrian anti-aircraft missile’ hits northern Cyprus

தமிழகத்தின் அடுத்த முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி

Low water pressure to affect several areas in Colombo