உலகம்

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா

(UTV|அமெரிக்கா)- உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது

கொரோனா வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

டொனால்ட் ட்ரட்ப், ஸ்தாபனத்தில் இருந்து விலகும் தமது தீர்மானத்தை கடந்த மே மாதத்தில் அறிவித்தார்.

இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாடுகள் எதிர்ப்பு வௌியிட்டிருந்தாலும், ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்பதுடன் நிதியுதவியை நிறுத்துவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் திகதி தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரும் என கூறப்படுகின்றது.

Related posts

பங்களாதேஷ் விமான விபத்தில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி – 50 பேர் காயம்!

editor

அரசாங்கத்திற்கு எதிராக பிரான்ஸில் போராட்டம்.

editor

இந்தியாவில் “தக்காளி காய்ச்சல்”