உலகம்

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 இலட்சத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 575,545 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 13,238,121 பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58,881 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 7,698,371 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு 3,479,483 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 138,247ஆக காணப்படுகிறது.

Related posts

சீனா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

இஸ்ரேல் மீது 12 உறுதியான தடைகள் விதிக்கப்படும் – பலஸ்தீனை அங்கீகரிக்கவும் முடிவு – பெல்ஜியம் பிரதிப் பிரதமர் அறிவிப்பு

editor

சிங்கப்பூரில் சஜித் பிரேமதாசவை சந்தித்த கிஷோர் மஹ்பூபானி

editor