உலகில் முதல் முறையாக சீனாவின் பீஜிங்கில் மனித உருவ ரொபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
நேற்று தொடங்கிய இப் போட்டி நாளை (16) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்பதோடு 500 இற்கும் மேற்பட்ட ரொபோக்கள் கலந்துகொள்கின்றன.
அதன்படி, தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் போன்ற 26 விளையாட்டுகளில் அவை போட்டியிடுகின்றன.