உலகம்

உலகளவில் கொரோனா 11.35 கோடியைக் கடந்தது

(UTV |  ஜெனீவா) – சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.35 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.91 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25.18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.18 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91 ஆயிரத்து 400-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் 520,785 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து – 7 பேர் உயிரிழப்பு

editor

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம் – ஹொங்கொங்கில் சம்பவம்

editor

இஸ்ரேல் – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் புதிய வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தம்