உள்நாடு

உறுதிச் சான்றிதழை ஒரே நாளில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு.

(UTV|COLOMBO) – வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

நிர்மாணப்பணிகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது நிலவும் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நீண்டகால தாமதம் காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

எனவே நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களை இலகுபடுத்தி, மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முடியுமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சுற்றுநிருபம் கல்வி சார்ந்த துறையினருக்கும் பொருந்தும்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

நான் இருந்திருந்தால் சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன் – டக்ளஸ் தேவானந்தா

editor