உள்நாடு

உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், உருளைக்கிழங்கு மற்றம் பெரிய வெங்காயத்தின் விலைகள் கனிசமான அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிப்பு – ஜனாதிபதி அநுரகுமார

editor

20 ஆவது அரசியலமைப்பு : 22 ஆம் திகதி பாராளுமன்றுக்கு

யாழ். வைத்தியசாலையின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு