வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
3 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்தில் வெறுமையான தோட்டாக்கள் சில மீட்கப்பட்டதால், வைத்தியர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி அநுராதபுரம் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று காலை முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியர்களின் இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாகச் சிகிச்சை பெறுவதற்காகத் தூர இடங்களிலிருந்தும் வருகை தந்த நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
