பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று கல்வி அமைச்சில் இன்று (22) முற்பகல் நடைபெற்றது.
கல்விச் சீர்திருத்தங்களுடன் பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.
டிசம்பர் 12 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருந்த போதிலும், அதனை மேற்கொள்ளவில்லை என தொழிற்சங்கங்கள் இங்கு சுட்டிக்காட்டின.
இன்றைய தினம் பிரதமர் தமது கருத்துக்களுக்கு ஓரளவு செவிசாய்த்ததாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்ததாகவும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
