உள்நாடு

உரிமம் இன்றி யானை வைத்திருந்த சம்பவம் – அலி ரொஷானின் பிணைக் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்த குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அலி ரொஷான் எனப்படும் சமரப்புளிகே நிராஜ் ரொஷானின் பிணை கோரிக்கை மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான மஞ்சுள திலகரத்ன மற்றும் லங்கா ஜயரட்ன ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக்க பண்டார, இந்த பிணை கோரிக்கை மனுவுக்கு எதிரான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.

அதன்படி, இந்த வழக்கிற்கு தொடர்புடைய ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த மாதம் 28-ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

அதன் பின்னர், இந்த பிணை மனு மீதான விசாரணை டிசம்பர் மாதம் 15-ஆம் திகதி நடைபெறும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

உரிமம் இன்றி யானை வைத்திருந்த குற்றத்திற்காக குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ‘அலி ரொஷான்’ என்ற இவருக்கு, கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற குழாம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்திருந்தது.

இந்த சிறைத் தண்டனைக்கு எதிராக தாம் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த மேன்முறையீடு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி ‘அலி ரொஷான்’ தமது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

editor