கிசு கிசு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் மோசமான அழிவு ரஞ்சனின் குரல் பதிவுகள்

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் குரல் பதிவுகள் காரணமாக நாட்டில் பாரியளவிலான சர்ச்சை நிலைமை தோன்றியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் மோசமான அழிவாகும் எனவும் குறித்த குரல் பதிவுகளினால் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அனுராதபுரம் நாச்சியாதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதிலிருந்து தெளிவாகுவது என்னவெனின், பிரச்சினை பாராளுமன்றில் இல்லை, அவர்களை நியமிக்கும் மக்களே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டை விட்டு வெளியேற அவசியம் இல்லை

மின்தூக்கியில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மட்டு?

வாசுதேவ நாணயக்கார உயிருக்கு?