சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் ஏ.சி, ரிஸ்வான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில், தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினூடாக ஆயுதப் பயிற்சி பெற்றமை தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்