உள்நாடு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – 61 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|மட்டக்களப்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 28ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (14) காலை இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே, விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

நுவரேலியாவிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்

விலகுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் திஸ்ஸ அத்தநாயக்க

editor

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor