சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள்களை கண்டறியும் தெரிவுக்குழுவுக்கு 8 பேர் நியமனம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழுவுக்கு, சபாநாயகர் கரு ஜயசூரியவால், 8 பேரடங்கிய குழுவினர், இன்று(23) நியமிக்கப்பட்டது.

மேற்படி குறித்த இந்தக் குழுவில் ,பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க தலைமையிலான , பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கம், ரவி கருணாநாயக்க, ஜயம்பதி விக்கிரமரத்ன, காவிந்த ஜயவர்தன, ஆசு மாரசிங்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Related posts

அதிபருடைய கணவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்பாட்டம்

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்