உள்நாடுபிராந்தியம்

உயிருக்கு போராடிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு

அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் வீழ்ந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுத்தையொன்றை நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுத்தையை கண்ட பிரதேச மக்கள் அது தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பிரவேசித்த அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை, மூன்று மணிநேர போராட்டத்துக்கு பின்னர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த நிலையில், அதனை சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுத்தை சுமார் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிய சிகிச்சைகளின் பின்னர் சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

-சதீஸ்குமார்

Related posts

சம்மாந்துறை பஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ் செலுத்துங்கள் – ரிஷாட்

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor

விமானப் பயணிகள், பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – சந்தேக நபர் கைது!

editor