நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (01) மாலை 6 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 382,651 குடும்பங்களைச் சேர்ந்த 13,373,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
432 வீடுகள் முழுமையாகவும், 15,688 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் 1,368 பாதுகாப்பு முகாம்களில் 57 ஆயிரத்து 790 குடும்பங்களைச் சேர்ந்த 204,597 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
