நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 183 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நிலவிய சீரற்ற வானிலையானது நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ளதுடன், இதனால் 3 இலட்சத்து 85,093 குடும்பங்களைச் சேர்ந்த 13 இலட்சத்து 44,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
