உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்றும் நிறைவு

(UTV | கொழும்பு) – கல்வியாண்டு 2021, க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தமர்வுகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தடை செய்யப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், சமய நிகழ்ச்சிகள் அல்லது வேறு எந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குறிப்பிட்ட பாடசாலைகள் இன்று மீளவும் ஆரம்பம்

116 பேரடங்கிய குழு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்

“ஜனாதிபதி தேர்தலை நடத்த இடைக்கால தடை மனு: ரணில் வெளியிட்ட அறிவிப்பு”