உள்நாடு

உயர்தர திரிபோஷா தொடர்ந்து வழங்கப்படும்

(UTV | கொழும்பு) – இந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தெற்காசியாவிலேயே குழந்தைகளுக்கு இவ்வாறான ஊட்டச் சத்துக்களை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்கு தேவையான அதிகபட்ச ஒதுக்கீடு கருவூலத்தில் இருந்து ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான உண்மைகளை ஆராய்ந்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திரிபோஷாக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு மேலதிகமாக சில தனியார் நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் திரிபோஷா திட்டத்தில் எந்த செயலிழப்பும் இல்லை, உணவு பணவீக்கம் இல்லை.

Related posts

நாடு திரும்பினார் பிரதமர்

பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor

பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்த நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor