உள்நாடு

உயர்தர – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், யாருக்கும் எவ்விதமான அநீதிகளையும் இழைக்காது பரீட்சை நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை!

மாலைதீவு உயர்ஸ்தானிகரை சந்தித்த பிரதமர் ஹரிணி

editor

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச.