உள்நாடுசூடான செய்திகள் 1

உம்ராவுக்கான பாஸ்போட் எடுக்கச்சென்ற 4பேர் விபத்தில் பலி!

(UTV | கொழும்பு) –

தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற விபத்தில் கஹடகஸ்திகிலிய SAM கொமினிகேசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா ,  (கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியரின் சகோதரர் ) மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வேன் ட்ரைவர் உட்பட நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்..

உம்றா செல்வதற்காக பாஸ்போட் எடுப்பதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பி வரும் வழியில் இரவு 11:30 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

வீதி ஓரத்தில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் குறிப்பிட்ட வேன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 33, 36, 43,46 வயதுடையவர்கள் என தெரிவிக்க படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும்  பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2646 ஆக உயர்வு

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்