உள்நாடு

உப்பு விலை குறைந்தது!

அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, 400 கிராம் அயடின் கலந்த உப்பு தூள் பெக்கெட்டின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

1 கிலோகிராம் அயடின் கலந்த உப்பு தூள் பெக்கெட்டின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்பு தூள் பெக்கெட் ஒன்று 100 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் உப்பு தூள் பெக்கெட் 200 ரூபாவுக்கும், 1 கிலோகிராம் கட்டி உப்பு பெக்கெட் 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.

Related posts

பிரதமரின் சுதந்திர தின செய்தி

இன்றும் பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!