உள்நாடு

உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில் சந்தையில் வெளியிடுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளைச் செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.

சந்தையில் விற்கப்படும் உப்பின் விலைகள் தொடர்பில் அதிகாரசபை முன்னெடுத்துவரும் கணக்கெடுப்பின் படி, கடந்த காலத்தில் பல்வேறு விலைகளில் உப்பு விற்பனை, பருவகால உப்பு பற்றாக்குறை மற்றும் தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கம் மற்றும் முன்னணி உப்பு உற்பத்தியாளர்கள் உட்பட பதினெட்டு நிறுவனங்களுடன் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய சந்தை சூழ்நிலையால் நுகர்வோர் சிரமப்படாமல் இருக்க விலைகளைப் பராமரிப்பதில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உப்பு சந்தைக்கு வரவிருப்பதால், மார்ச் மாத இறுதிக்குள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் விற்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், அதுவரை விலை உயர்வு இல்லாமல் விலை நிலையாக இருக்க வேண்டும் என்ற அதிகாரசபையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

Related posts

இன்றும் மழை

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு